Tuesday, August 19, 2008

preiyar.d.k

BlogspotBlogspotமதியம் ஞாயிறு, டிசம்பர் 2, 2007


பெரியார் மின்நூல் தொகுப்புத்திட்டம் - தமிழர் தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!






தமிழர் தலைவருக்கு 75 வது பிறந்தநாள் பெரியார் திடல் தோழர்களால் நிரம்பி வழிகிறது. வரிசையாக குடும்பம் குடும்பமாக தோழர்கள் தலைவருக்கு வாழ்த்துச்சொல்லி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் வரிசையில் வருகின்றனர். மொய் வசூல் போல கவரும் குவிகிறது. தலைவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க என தனியாக ஒரு வசூல் நடக்கிறது. மலர் வெளியீடு மூலமாக தனியாக ஒரு வசூல் , மாலையில் இந்நாள் முதல்வரும், வருங்கால முதல்வரும், இந்த இருவரும் கோபித்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க உள்ள ஜால்ரா விழா, இறுதியாக ஜால்ரா ஏற்புரை என அனைத்தும் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.






பெரியாரின் உண்மை வாரிசாக அவராலேயே அறிவிக்கப்பட்ட அவரது எழுத்துக்களில் முக்கியமானதான குடிஅரசு, புரட்சி, ரிவோல்ட் இதழ்களின் கட்டுரைகள் இன்னும் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் , பெரியார் காலத்துக்குப்பின் கட்டடங் களையும், கல்வி நிறுவனங்களையும், ஜால்ராக்களின் எண்ணிக்கையையும் மட்டும் அதிகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளை நிர்வாகிக்கு இவ்வளவு பெரிய பாராட்டு-படாடோபங்கள் தேவையா? ஏன்ற செய்திகளுக் குள் அதிகம் போகாமல் இந்த ஜால்ராப் பணிக்கு அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.






மின்சாரத்தைக் கண்டுபிடித்தால் அது விநாயகர் சிலைக்கு சீரியல் செட் போடவும், விநாயகனே….வினை தீர்ப்பவனே.. என சீர்காழி கோவிந்தராஜனை வைத்துக் கரடியாகக் கத்துவதற்கும் பயன்படுவது போல, அறிவியலின் வியக்கத்தக்க வளர்ச்சியான இணையதளம், இணையதள நேரடி ஒளிபரப்பு, இணைய வானொலி, மின்னூல் ஆகிய தொழில்நுட்பங்கள் பெரியாரின் கொள்கைகளை மக்களுக்குக் கொண்டு செல்லுவதற்கு பயன்பட வேண்டியதற்கு பதிலாக உலகிலேயே முதன்முதலாக 75 வயது வாழ்ந்து விட்ட தலைவருக்கு ஜால்ரா அடிக்க பயன்படுவது மிகக் கொடுமையாக உள்ளது.






காலை 7.30 மணி முதல் தமிழர் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நேரடிஒளிபரப்பாக http://www.periyar.org.in/ என்ற தளத்தில் வந்துகொண்டிருக்கிறது. http://www.viduthalai.com/ என்ற தளத்தில் தமிழர் தலைவருக்கு ஆன்லைனில் வாழ்த்துக்கள் பதிவு நடந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு தளங்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்த இணைப்புகள் அனைத்திற்கும் சென்று பார்க்க நேர்ந்தது.






பெரியார் மின்நூல் தொகுப்புத் திட்டம் ( eperiyar)


தலைப்பைப் பார்த்ததும் மிக வியப்பு. அடேயப்பா! தலைவர் பின்றாருப்பா! என மனதில் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தால்…… இரண்டே இரண்டு புத்தகங்கள், அதிலும் ஒன்று கி.வீரமணியின் படைப்பு என உள்ளது. தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை என்ற ஒரே ஒரு நூல் மட்டும் மின்னூலாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றி வைக்கப்பட்டுள்ளது. தலைவர் எழுதிய புட்டபர்த்தி சாய்பாபா என்ற மற்றொரு நூல் உள்ளது. அதிலும் பெரியார் எழுதிய நூல் ஏற்கனவே http://www.dravidar.org/ திராவிடர் இணையதளத்தில் பல மாதங்களுக்கு முன்பே பதிவேற்றி வைக்கப்பட்டதாகும்.






பெரியார் விட்டுச்சென்ற கோடிக்கணக்கான மதிப்பிலான அசையும், அசையாச் சொத்துக்கள், அதன் மூலம் உருவான அச்சகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம், ஆயிரக்கணக்கான கணினிகள், மென்பொருள் நிறுவனம், நூற்றுக்கணக்காக கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள், மிகப்பெரிய இடவசதி கொண்ட இணையதளம், ஒவ்வொரு ஆண்டும் தம் கல்வி நிறுவனம் மூலம் உருவாகும் நூற்றுக்கணக்கான வன்பொருள்- மென்பொருள் வல்லுநர்கள் என மிகப்பெரும் வாய்ப்பு வசதிகளை வைத்துக்கொண்டு பெரியார் மின்நூல் தொகுப்புத் திட்டம் எனப் பெரிதாகப் பெயரும் வைத்துக்கொண்டு ஒரே ஒரு நூலை மட்டும் பதிவேற்றிவைத்துக்கொண்டு கொஞ்சமும் கூச்சமின்றி பிரமாண்டவிழாக்கள் நடத்த எப்படி முடிகிறதோ தெரியவில்லை.






அதைவிட பெரிய கூத்து என்னவென்றால், வெப் ரேடியோ என்ற இணைப்பில் Non stop audio on periyarism என்று தலைப்பில் சென்று பார்த்தால் பெரியாரின் இறுதி உரை மற்றும் இரண்டு பெரியார் பாடல்கள், ஒரு வீரமணி புகழ் பரப்பும் பாடல் அவ்வளவுதான். இது Non stop audio on periyarism மாம். என்ன கொடுமை சார் இது!






பெரியார் கருத்துக்கள் சிலவற்றின் மீது ஆர்வங்கொண்டு அவற்றைப்பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தனிப்பட்ட முறையில் http://www.periyarevr.org/ என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்திவருகிறார் தோழர் பூங்குழலி. அவரது தளத்தில் இதை விட பலமடங்கு அதிகமாக, இதுவரை பெரியாரின் உரை களாக வெளிவந்துள்ள அனைத்தையும் பதிவேற்றி உள்ளார்.






பெரியார் மின்நூல் தொகுப்புத் திட்டம், வெப் ரேடியோ, வெப் டி.வி, இந்தப் பெயரைச் சொல்லி எவ்வளவு கல்லா கட்டினார்களோ தெரியவில்லை. அறக்கட்டளைதானே நடக்கிறது! அதனால் தான் சிறு சிறு வேலைகளைக் கூடத் தனித்தனி திட்டங்களாக (Projects) வரையறுத்து யாரிடமிருந்தாவது நன்கொடை வசூலை நடத்திக்கொள்கிறார். சரி எப்படியோ பிழைப்பு நடத்திக் கொள்ளுங்கள். 50 சதம் வேலையைச் செய்து 50 சதம் கொள்ளையடிக்கும் மற்ற அறக்கட்டளைகள் போலவாவது ஏதோ ஒரு 100 நூல்களையாவது மின்நூலாக்கிவிட்டு மீதப்பணத்தை வெள்ளையாக்கி இருக்கலாமே? இப்படி அம்புட்டையுமா ஆட்டையப் போடுவது?






உங்களைப் போல அறக்கட்டளைகள் இல்லாதாதால், திட்டமோ வட்டமோ போட முடியாமல் மிக எளிய தோழர்களின் நண்பர்களின் உதவியைப் பெற்று பதிப்புப் பணிகளையும், கணினியாக்கப்பணிகளையும் செய்து வருகிறது பெரியார் திராவிடர்கழகம்.


எந்த மின்நூல் திட்டமும் போடாமல் பெரியார் எழுதிய 20 இருபது நூல்களையும், கவிஞர்.கலி.பூங்குன்றன், கொளத்தூர் மணி, விடுதலை. இராசேந்திரன் ஆகியோர் எழுதிய 4 நூல்களையும் மின்நூலாக்கி உலகெங்கிலு முள்ள தமிழர்கள் http://www.dravidar.org/ திராவிடர் இணைய தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள வசதி செய்திருக்கிறது. பெரியார் திராவிடர் கழகம். சேலம் விசு என்ற ஒரு எளிய தோழர் திண்டுக்கல் அசுரன் ஊடகம் என்ற கணினி மையத்திற்கு நன்கொடை மூலம் வசூலித்து வழங்கிய ஒரு சாதாரண கணினி தான் இதற்கு பயன்பட்டது. வெறும் 500 எம்.பி அளவு கொண்ட திராவிடர் இணைத்திற்குள் தான் இத்தனை நூல்களும் உள்ளன. ஒரு P 4 கணினி, ஒரு பேனாசோனிக் டிஜிட்டல் கேமரா, ஒரு Matrox card, , செம்பட்டி இராசா, ஆல்பர்ட், பெரியகுளம் குமரேசன், சென்னை மதி, புதுவை கோபதி, அகிலன் ஆகிய கழகத் தோழர்களின் உழைப்பு. இப்படி ஒரு மிகச்சிறிய பின்புலத்தை வைத்துக்கொண்டு ,


மிகமிகக் குறைந்த விலையில் அடக்கவிலையில் நூல் வெளியீடுகள்,


திராவிடர் கழகம் 300 ரூபாய்க்கு குறுந்தகடு விற்பனை செய்து வந்த போது வெறும் 25 ரூபாய்க்கு குறுந்தகடு வெளியீடு,


பெரியாரியலாளர்களின் பெருங்கனவான குடிஅரசு நூல் வெளியீடு,


பெரியார் பெயரில் இணையதளம் வைத்துக்கொண்டு ஒரே ஒரு பெரியார் நூலை மட்டும் பதிவேற்றி வைத்திருக்கும் நிலையில் 24 நூல்களை மின்நூலாக்கி, இலவச பதிவிறக்கத்திற்கும் வசதி செய்தது,


மலிவு விலையில் 10க்கும் மேற்பட்ட குறுந்தகடு வெளியீடு


http://www.periyarevr.org/, http://www.evrperiyar-bdu.org/ போன்ற இணைய தளங்களுக்கு 1925, 1926, குடிஅரசு இதழ்களை யூனிகோடு முறையிலும் பி.டி.எஃப் முறையிலும் வழங்கி அவற்றையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்திட வழி செய்தது,


1925 முதல் 1949 வரையிலான அனைத்து ஆண்டுகளின் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட் இதழ்களையும் கணினிமயமாக்கி, அச்சிடவும், மின்நூலாக்கவும் உரிய பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.


அரசு அனுமதியுடன் பாரதிதாசன்பல்கலைக்கழகத்தில் பெரியாரியல் உயராய்வு மய்யம் மூலம் அதன் இயக்குநர் தோழர் எஸ்.வி. இராசதுரை அவர்களது பெரும் முயற்சியில் பெரியாரின் அனைத்து எழுத்துக்களையும் கணினி மயமாக்கி, மின்நூலூக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்போதே அதன் http://www.evrperiyar-bdu.org/ இணையதளத்தில் பெரியாரின் நூல்களும், பெரியாரியல் குறித்த ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.


பெரியார் திராவிடர் கழகம் மட்டுமல்ல, இணையதளங்களில், வலைப்பூக்களில் எண்ணற்ற மென்பொருள் வல்லுநர்கள் தனிப்பட்ட நபர்கள் பெரியார் கருத்துக்களை பதிவேற்றி வைத்துள்ளனர். குறிப்பாக தமிழச்சி. பெரியார் எழுத்துக்களாக இதுவரை வெளிவந்துள்ள அனைத்தையும் சுமார் 1500 பதிவுகளை பதிவேற்றி உள்ளார். அதற்காக உலகெங்கிலுமுள்ள பார்ப்பனர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். தமிழச்சியின் நிர்வாணப்படங்களை வெளியிடுவோம் என பார்ப்பனர்கள் மிரட்டும் அளவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் பெரியாரின் எழுத்துக்களை இளந்தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார்.


மேலும் சுகுணாதிவாகர், வரவனையான், ஜமாலன், குழலி, முத்துத்தமிழினி, லக்கிலுக், லிவிங்ஸ்மைல் வித்யா, ம.இளங்கோ, கருப்புப்பையன் போன்ற நூற்றுக்கணக்கான தோழர்கள் திராவிடர் கழகத் தலைமையை விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக இணைய தளங்களில் பெரியாரைக் கொண்டு செல்கின்றனர். இவர்கள் அனைவரும் தனிப்பட்டவர்கள் மட்டுமே. தனிப்பட்ட ஒவ்வொருவரின் உழைப்பில் பெரியார் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர்.

இப்படி சிறிய இயக்கங்கள், அமைப்புகள், தனிப்பட்ட பெரியாரியல் ஆர்வலர்கள் செய்யும் பணியில் பத்தில் ஒரு மடங்காவது செய்துவிட்டு பெரியாரை உலகமயமாக்குகிறோம் என அறிவித்தால்… சரி, பாராட்டலாம்.


பெரியார் சிலை அவமதிப்பா களத்தில் இறங்கி பார்ப்பானின் பூணூல் அறுத்து தேசப்பாதுகாப்புச்சட்டங்களை அனுபவிக்க வேண்டாம்.


அயோத்தியா மண்டபங்களில் வெடிகுண்டு வீசவேண்டாம்


சங்கரமடங்களை நொறுக்க வேண்டாம்


கொடும்பாவி கொளுத்தி வேண்டாம், கொடும்பாவிகளைத் தூக்கில் தொங்கவிட வேண்டாம்.


இரட்டை மாணவர் விடுதிகளா? சங்கரமடத்தை முற்றுகையிட வேண்டாம்


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளைகளா? கிராமம் கிராமமாகப் புகுந்து கடைகளை சூறையாடவேண்டாம்.


சிறைச்சாலை, நீதிமன்றம் இவற்றையெல்லாம் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பார்த்துக்கொள்வார்கள். குறைந்த பட்சம் குளிர்பதன அறைக்குள் கணினி முன் அமர்ந்து கொண்டு செய்ய வேண்டிய பணிகளையாவது உருப்படியாகச் செய்யுங்கள். தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்க பெ.தி.க தயாராக உள்ளது. மின்நூல் தொகுப்புத்திட்டமெல்லாம் நீங்கள் போட்டுக்கொள்ளுங்கள்.


எந்தத் திட்டமும் போடாமல் நாங்கள் முடித்துத் தருகிறோம்.






நீங்கள் திராவிடன் புத்தக நிலையத்தின் சார்பில் வெளியிடும் நூல்களை ஏற்கனவே கணினியாக்கம் செய்திருப்பீர்கள். அனைத்து நூல்களையும் பேஜ்மேக்கர் அல்லது எம்.எஸ். வேர்டு கோப்பாக வைத்திருப்பீர்கள். அவற்றை எமது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள். எண்ணி ஏழே நாட்களில் இப்போதுள்ள அனைத்து நூல்களையும் மின்னூலாக்கி இணையத்தில் பதிவேற்றித் தருகிறோம். இதற்காக ஒரு ரூபாய்கூட கூலியாக, சம்பளமாக, நன்கொடையாக எங்களுக்கு பணம் வேண்டாம். நீங்கள் செய்ய நினைத்தால் உங்கள் வசதிக்கு ஒரு நாள் போதும்.






எமது மின்னஞ்சல் முகவரிகள்






periyardk@gmail.com, periyarmulakkam@yahoo.com






ஒன்று நீங்கள் செய்யுங்கள், அல்லது நாங்கள் உதவுகிறோம். எதுவும் செய்யமால் வெறும் 32 பக்கத்தை இணையத்தில் பதிவேற்றி வைத்துக் கொண்டு பெரியாரை உலகமயமாக்கிவிட்டேன் என அறிக்கை விடாதீர்கள். உங்களால் விசயம் தெரிந்தவர்களிடம் நாங்கள் அசிங்கப்படவேண்டி வருகிறது.







மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை உங்களுக்கு ஜால்ரா அடிக்க மட்டும் பயன்படுத்தாமல் உங்களை ஆளாக்கிய பெரியாரைக் கொஞ்சம் ( கொஞ்சமாவது ) மனதில் நினைத்துக்கொண்டு, உங்கள் வருமானத்தில் வேண்டாம், பெரியார் கொடுத்துச் சென்ற பணத்திலாவது அவரது பணியைக் கொஞ்சம் செய்யுங்கள். தமிழ்நாடு.


பெரியார் திராவிடர் கழகம்.


திருப்பூர்.




பெரியார்.d.k





No comments:

periyar

Add to Google

Tamilan

Tamilan
koodal

P.D.K

Periyarists........

Puratchiperiyar

Puratchiperiyar
muzhakkam

Paarthavargal

Tamilan Vaanoli.

Tamilan Vaanoli.
PeriyarThullal.

Periyarist visiters

Periyar

Periyar
Bathil

Tirupur

Tirupur
Maanagaram

periyar pirandha oour?

veeramani

veeramani
mugam

About Me

My photo
Tirupur, Tamilnadu, India
MangaiMobiles. New BusStand, 4.P.N.Road, Tirupur.